Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out

Pages

Saturday, March 24, 2012

சைலன்ஸ் ப்ளீஸ்... - குறும்படம் திரைக்கதை




INT. PSYCHIATRIC WARD/HOSPITAL - DAY                                                 SCENE #1

கைகளில் மெடிக்கல் ரிப்போர்ட்டுடன் சில பேஷண்டுகள் நாற்காலிகளில் காத்திருக்கின்றனர். ‘டாக்டர் ரங்கபாஷ்யம், சைக்கியாட்ரிஸ்ட்’ என்ற எழுத்துக்கள் பித்தளையில் மின்னுகின்றன. டாக்டர் ‘IN’-ல் இருக்கின்றார். சுவரில் ‘ON APPOINTMENT ONLY,’ ‘SILENCE PLEASE’ என்ற அறிவிப்புகள். அந்த நடுத்தர வயது மனிதர் பரபரப்பாக, அமைதியின்றி உட்கார்ந்திருக்கின்றார். கதவின் முன் டேபிள் போட்டுச் சேரில் அமர்ந்திருக்கும் நர்ஸ் அவரைப் பார்த்து, ‘கொஞ்சம் பொறுமை’ என்று சைகை செய்கின்றாள். உள்ளே டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்த நோயாளி வெளியே வருகின்றார். கூடவே இன்னொருவரும் பின்தொடர்ந்து வருகின்றார்.

NURSE 
சார் நீங்க போங்க... 

அந்த நபர் அதற்கெல்லாம் அவசியமேயில்லாமல் அவசரமாக உள்ளே செல்கின்றார்.


INT. DOCTOR'S ROOM/HOSPITAL - DAY                                                         SCENE #2

டாக்டர் உள் அறையிலிருந்து வருகின்றார். திரையை நன்றாக இழுத்து விடுகின்றார்.

DR. RANGABASHYAM
உக்காருங்க... 

வந்த பேஷண்ட் உட்காருகின்றார். பைலை டேபிள் மேல் வைக்கின்றார். டாக்டர் வந்து தன் சேரில் அமர்ந்து சற்றே திரும்பி ஏர்கண்டிஷனர் அருகில் சென்று காற்று வாங்குகின்றார். பின் பேஷண்ட் வைத்த பைலை எடுத்துப் பார்க்கின்றார்.

DR. RANGABASHYAM (CONT’D)
நியூ பேஷண்டா... 
(beat)
...ஆமா கூட யாரும் வரல்லயா? 

PATIENT
இல்ல டாக்டர் நான் மாத்திரம்
தான் வந்தேன்...

டேபிளில் இருக்கும் டாக்டரின் செல்போன் அழைக்கின்றது.

DR. RANGABASHYAM
எக்ஸ்க்யூஸ் மீ... 

செல்போன் எடுத்துப் பேசுகின்றார்.

DR. RANGABASHYAM (CONT’D)
சொல்லு... என்ன... அப்படியா... 
ஏன்... எப்போ... சரி நான் 
வர்றேன்... கண்டிப்பா வர்றேன்...

அந்த நபர் டாக்டரையே பார்த்துக் கொண்டிருக்கின்றார். டாக்டர் பைலைக் கையிலேயே வைத்துக் கொண்டிருக்கின்றார். டாக்டர் செல்போனை அணைத்துவிட்டு டேபிளில் இருக்கும் போனை எடுத்து டயல் செய்து பேசுகின்றார்.

DR. RANGABASHYAM (CONT’D)
மேரி இது தான்மா கடைசி பேஷண்ட்... 
நான் அர்ஜன்டா போகணும்... 
மத்த அப்பாயிண்ட்மெண்ட் 
எல்லாம் கேன்சல் பண்ணிடு... 
(போனை வைத்துவிட்டு)
சாரி சொல்லுங்க... என்ன கம்ப்ளைன்ட்? 

PATIENT
சொன்னா நம்ப மாட்டீங்க டாக்டர்

DR. RANGABASHYAM
நீங்க முதல்ல உங்க பிரச்னையைச் 
 சொல்லுங்க... நம்பலாமா 
வேண்டாமான்னு நான் முடிவு பண்றேன்... 

PATIENT
டாக்டர் அது வந்து வெளியே 
யாருகிட்டயாவது சொன்னா அவங்க 
என்னை மெண்டல்னு 
சொல்லிடுவாங்களோன்னு பயமாயிருக்கு

DR. RANGABASHYAM
இங்க பாருங்க நான் டாக்டர் உங்க 
பிரச்னை என்னன்னு கேட்கத்தான் 
நான் இங்க இருக்கேன்... 
அதனால தைரியமா சொல்லுங்க...
(beat)
...காதுல ஏதாவது குரல் கேட்குதா? 
ரொம்பக் கோபம் வருதா?

PATIENT
அதெல்லாம் இல்ல டாக்டர்... 

அப்போது நர்ஸ் வருகின்றாள்.

NURSE
டாக்டர், உங்க இன்சுலின் 
டோஸ் ஞாபகப்படுத்தச் சொன்னீங்க... 

திரைக்குப் பின் சென்று சிரிஞ்சை எடுத்துக் கொண்டு வருகின்றாள். டாக்டரிடம் கொடுத்து விட்டுச் செல்கின்றாள். டாக்டர் அதை எடுத்துத் தனக்குத் தானே போட்டுக் கொள்கின்றார்.

DR. RANGABASHYAM
சாரி... ம்... சொல்லுங்க... 

சிரிஞ்சை டஸ்ட்பின்-ல் போடுகின்றார்.

PATIENT
சாகப் போறவங்களை 
நான் பாக்கறேன் டாக்டர்... 

DR. RANGABASHYAM
என்னது? ...சாகப் போறவங்களா?
(beat)
கம் அகெய்ன்... சாகப்போறவங்கன்னா...
...எல்லாரும் என்னைக்காவது 
சாகப் போறவங்க தான்... 
தெளிவாச் சொல்லுங்க... 

PATIENT
சாகறதுக்கு முன்னாடி அவங்களைப்
பாத்த கடைசி ஆள் நாந்தான் டாக்டர்...

DR. RANGABASHYAM
இஸ் இட்?
(beat)
...ஏன் அது உங்க பிரமையாக் கூட 
இருக்கலாம்... அவங்க வேற 
காரணங்களால செத்துப் போயிருக்கலாம்... 
(beat)
...நீங்க பாக்கறவங்க எல்லாருமா
செத்துப் போகறாங்க?

கண்களில் சந்தேகத்துடன் கேட்கின்றார்.

PATIENT
(சிறிது தயக்கத்துடன்)
...நான் யாரையெல்லாம் பாக்கறப்போ 
அவங்க தலைக்குப் பின்னாடி 
ஒளிவட்டம் தெரியுதோ அவங்கல்லாம்
செத்துப் போயிடறாங்க டாக்டர்... 

DR. RANGABASHYAM
இப்ப என் தலைக்குப் பின்னாடி 
ஒளி வட்டம் தெரியுதா? 

சிரிக்காமல் கேட்கின்றார்.

PATIENT
இல்லை டாக்டர்... ஆனா, இதனால
போலீஸ் பிரச்னை வருமோன்னு 
பயப்படறேன் டாக்டர்...
(beat)
...நான் தான் கொலை செஞ்சேன்னு 
என்னை அரெஸ்ட் 
செஞ்சிடுவாங்களா டாக்டர்?

DR. RANGABASHYAM
இங்க பாருங்க, நீங்க தப்பு 
செஞ்சிருந்தா தான் பயப்படணும்... 
இல்லன்னா பயப்பட வேண்டாம்... 

PATIENT
நான் எந்தத் தப்பும் 
செய்யாதவன் டாக்டர்... ராத்திரி 
பன்னிரண்டு மணிக்குக் கூட 
டிராபிக்ல ரெட் சிக்னலுக்குக் 
காத்திருந்து அப்புறம் தான் 
டாக்டர் போவேன்... 

டாக்டர் திரையைத் தள்ளிவிட்டுக் கொண்டு பேஷண்டைப் பின்னாலுள்ள அறைக்கு அழைத்துப் போகின்றார்.

DR. RANGABASHYAM
வாங்க... உள்ள வாங்க, இந்த 
சேர்ல உட்காருங்க...
(முன்னாலிருக்கும் சில 
கருவிகளை அகற்றிவிட்டு)
...சௌகரியமா உட்காருங்க... 

சாய்வான வித்தியாசமான நாற்காலியில் உட்கார வைக்கின்றார். கறுப்பு - வெள்ளை டிசைன் போட்ட வட்டத் தகடு ஒன்று லேசாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றது. டாக்டர் பேஷண்டுக்கு ஒரு ஊசி போடுகின்றார். ஊசி போட்ட இடத்தைத் தேய்த்து விடுகின்றார். பஞ்சைத் தூக்கிப் போடுகின்றார். 

DR. RANGABASHYAM (CONT’D)
நல்லா ரிலாக்ஸ் செஞ்சுக்குங்க... 
நான் சொல்றதை மட்டும் செய்ங்க... 
ஓகே... 

பேஷண்ட் ‘சரி’யென்று தலையாட்டுகின்றார்.

DR. RANGABASHYAM (CONT’D)
இங்கயே பாருங்க... நீங்க பாத்து
இதுவரை எத்தனை பேர் அப்படி 
செத்துப் போயிருக்காங்க? 

PATIENT
மூணு பேர் டாக்டர்...

DR. RANGABASHYAM
எப்படி செத்துப் போனாங்கன்னு தெரியுமா?

PATIENT
ஒருத்தர் ரோட் ஆக்சிடெண்ட்ல, 
இன்னொருத்தர் மாடியிலருந்து குதிச்சு, 
இன்னொரு ஆளு தூக்கு மாட்டி 
தற்கொலை செஞ்சுகிட்டார் டாக்டர்... 

DR. RANGABASHYAM
எப்படி செத்தாங்கன்னு எல்லாரும் 
சொன்னாங்க? அதாவது 
போலீஸ், பாத்தவங்க...

PATIENT
விபத்து, தற்கொலைன்னு தான் 
டாக்டர் எல்லாரும் சொன்னாங்க... 
ஆனா எனக்குத் தான் நான் 
கொன்னேன்னு சொல்லிடுவாங்களோன்னு
பயம்... அதுவும் என் கண்ணால 
என் பொண்டாட்டி, பசங்க 
தலைக்குப் பின்னாடி ஒளி வட்டம் 
பாத்துடுவேனோன்னு பயமாயிருக்கு... 

DR. RANGABASHYAM
உங்களை கம்ப்ளீட்டா குணப்படுத்த
வேண்டியது என் பொறுப்பு... 
எதுக்கும் கவலைப்படாதீங்க... 
(தன் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு)
...அது சரி, குறிப்பா எப்பலேருந்து
இந்த மாதிரி தெரியுது? 

PATIENT
எங்கப்பா செத்துப் போனதுலயிருந்து 
டாக்டர்...

DR. RANGABASHYAM
உங்கப்பா செத்துப் போய் 
எத்தனை நாள் ஆச்சு?

தன் உபகரணங்களைத் தயார் செய்கின்றார்.

PATIENT
ஒரு மூணு, நாலு மாசம் 
இருக்கும் டாக்டர்... எங்கப்பா 
ஆவி எனக்குள்ள பூந்திடுச்சா 
டாக்டர்? தெரிஞ்ச ஜோசியர் 
ஒருத்தர் அப்படித் தான் சொன்னாரு 
டாக்டர்... எங்கப்பா ஆவினால தான் 
எனக்கு இந்த சக்தி வந்திருக்குன்னாரு...

DR. RANGABASHYAM
படிச்சவங்க நீங்களே இப்படி 
சொன்னா எப்படி? ‘SCIENCE’ எவ்வளவு 
முன்னேறியிருக்குன்னு தினமும் 
பேப்பர்ல பாக்கறீங்க தானே?

PATIENT
போலீஸ்கிட்ட சொல்லலாம்னு 
போனேன் டாக்டர்... என்னையே 
கொலைகாரன்னு பிடிச்சிட்டா 
என்ன செய்யறதுன்னு தான் 
திரும்பி வந்துட்டேன்...

DR. RANGABASHYAM
நீங்க போலீசுல சொல்லியிருந்தா
அவங்களுக்கு அந்தத் தகவல் 
ரொம்ப ‘யூஸ்ஃபுல்’லா இருந்திருக்கும்...
உங்க பயத்தால நிஜமா 
அவங்க எதுக்காகத் தற்கொலை 
செஞ்சுக்கிட்டாங்கன்னு கண்டுபிடிக்க 
முடியாம போகக்கூடாதுல்ல...

PATIENT
போலீஸ் படிச்சவன், படிக்காதவன்னு
எல்லாம் பாக்கறது இல்லயே டாக்டர்...
அவங்களுக்கு எப்பவும் 
சந்தேகப் பார்வை தான்...

DR. RANGABASHYAM
இது ‘கோயின்சிடன்ஸாக்’ கூட 
இருக்கலாம். அவங்க தற்கொலை 
செய்ய முடிவு செஞ்ச நேரத்துல 
நீங்க போயிருக்கலாம்... 
இல்லையா? சரி ஆரம்பிக்கலாமா?
(பேஷண்ட் கண் சொருகுவதைப் 
பார்த்துவிட்டு)
...இங்கயே பாருங்க... 

                                                                                                                                   FADE OUT.

FADE IN:

I/E. HALLWAY/HOSPITAL - DAY                                                                          SCENE #3

அந்தப் பேஷண்ட் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருகின்றார். தன் கையில் இருக்கும் பைலை நர்சிடம் கொடுக்கின்றார். நர்ஸ் அவரைப் பார்த்துச் சிரிக்கின்றாள். பேஷண்ட் தலையாட்டுகின்றார். நர்ஸ் பைலைத் திறந்து பார்க்கின்றாள். அதில் நூறு ரூபாய் கட்டு ஒன்று இருக்கின்றது.

NURSE
(பேஷண்டைப் பார்த்து)
தேங்க்ஸ் டாக்டர்... 

அந்தப் பேஷண்ட் ஹாஸ்பிடல் கேட் தாண்டும் போது துப்பாக்கிச் சத்தம் கேட்கின்றது. மக்கள் ஓடுகின்றனர். சிலர் துப்பாக்கிச் சத்தம் வந்த டாக்டர் ரங்கபாஷ்யத்தின் ரூமிற்க்கு விரைகின்றனர்.

                                                                                                                        FLASH BACK TO:

SOME TIME AGO...

INT. DOCTOR'S ROOM/HOSPITAL - DAY                                                  SCENE #4

டாக்டர் பேஷண்ட் படுத்திருந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்றார். பேஷண்ட் முன்பு டாக்டர் இருந்த இடத்தில் நின்று கொண்டிருக்கின்றார். 

PATIENT
...உங்க பேராசைக்காக எங்கப்பாவை
ஏண்டா கொன்னீங்க? அவர் என்ன 
தப்பு செஞ்சார்? பனிரெண்டு பத்துக்கு
உன் துப்பாக்கியாலே நீயே 
உன்னை சுட்டுக்கணும்... சரியா? 
நீ செஞ்ச தப்புக்கு இது சரியான தண்டனை?

DR. RANGABASHYAM
ஆமாம்... நாங்க எல்லாம் சேர்ந்து 
தான் செஞ்சோம்... அதுக்கு இந்த 
தண்டனை தேவை தான்... இன்னும் 
பத்து நிமிஷத்துல நான் சுட்டுகிட்டு 
செத்துப் போவேன்... கண்டிப்பா 
செத்துப் போவேன்... நான் இனியும் 
வாழறதனால யாருக்கும் 
எந்தப் பிரயோஜனமும் இல்ல... 

                                                                                                                               FADE OUT.

FADE IN:

EXT. ON ROAD/NEAR HOSPITAL - DAY                                                        SCENE #5 

வாகனங்கள் சிக்னலில் பச்சைக்காகக் காத்திருக்கின்றன. சாலையில் பாதசாரிகள் சாலையைக் கடக்கின்றனர். அந்தப் ‘பேஷண்ட்’ சாலையைக் கடக்கும் போது நடுவில் சற்று நின்று வானத்தைப் பார்க்கின்றான்.

THE END

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...