பல வருடங்களுக்கு முன் நாம் பிறந்த, வாழ்ந்த, விற்ற வீட்டை மறந்திருந்தாலும் யாருக்கும் வாசற்கதவு மறந்திருக்காது. நம் பழையவீடு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாசற்கதவு தான். வீட்டின் உள் அமைப்பு கூட மறந்துபோயிருக்கக் கூடும்.
பாதி திறந்த கதவு, பாதி மூடிய கதவு இரண்டுமே ஒன்றுதான். ‘ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்’ என்றும், ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்றும் சொல்வது கதவைப் பற்றி அல்ல
