Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out

Pages

Wednesday, May 9, 2012

வழக்கு எண்: 18/9 - விமர்சனம் அல்ல, அலசல்


படத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பாதி - ”இந்தப் படத்திற்கா
மக்கள் எழுந்து நின்று கைதட்டுகின்றார்கள்?” என்று நினைக்க வைக்கும் அளவுக்கு
சாதாரணம் - unimpressive first half. முதல் பாதியில் விட்டதற்கு சரிகட்டும்
விதமாக 2-ம் பாதி. ஏனெனில், படத்தின் கதை இடைவேளைக்குப் பின்
தான் ஆரம்பிக்கின்றது. கிளைமாக்ஸ் சூப்பர்.
முதல் பாதி திரைக்கதையினாலேயே இயக்குனருக்கு தயாரிப்பாளர் கிடைக்க சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று தோன்றுகின்றது. நம் இயக்குனர்கள் பலரும் ஒரு பகுதியைத் தான் சிறப்பாக எடுக்கின்றனர். மற்றதை விட்டுவிடுகின்றனர். சமீபத்திய உதாரணம் - “3.” “ஓகேஓகே” பட இயக்குனர் ராஜேஷுக்கு கிளைமாக்ஸ் தான் எல்லாப் படத்திலும் பிரச்னை, Unconvincing climax. சமீபத்திய ”அரவானி”லும் ஆதியின் கேரக்டர் இறக்கும் போது நமக்கு ஏற்படும் பாதிப்பு அதிகமில்லை, காரணம் ஆதி வருவதற்குள் தன் நடிப்புத் திறமையால் தன்னையே கதாநாயகனாக நிலைநிறுத்திக் கொள்கின்றார் பசுபதி.

இயக்குனரிடம் ”மேட்டருக்கு வாங்க” என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு
முதல் பாதி பொறுமையை சோதிக்கின்றது. இயக்குனர் பாலாஜி
சக்திவேல் இன்னும் “காதல்” hangover-ல் இருப்பது போல் எனக்குத் தோன்றியது.
சுவாரசியமில்லாத Cliched முதல் பாதி. சில பாத்திரங்கள் தவிர,
உதாரணம் - சின்னச்சாமி. அறிமுகங்கள் என்பதால் பல கதாபாத்திரங்கள்
வசனத்தை ஒப்பிக்கின்றனர். உடல் மொழியும், முகபாவனைகளும் மிஸ்ஸிங்.
”ஓகே ஓகே”-ல் உதயநிதியும் இதே தான் செய்திருந்தார். அதனாலேயே படம்
எனக்கு நெருடலாக இருந்தது. (”ஓகே ஓகே”-ல் ஆர்யா வந்தவுடன் படத்திற்கு
கரெண்ட் ஷாக் அடித்தது போல் energy flow கவனித்திருக்கின்றீர்களா?)


இயக்குனர் பாலாஜி சக்திவேலின் ”கல்லூரி” திரைப்படம் வெற்றி பெறாமல் போனதற்கான காரணம் என்று எனக்குப்படுவது linear முறையில் இல்லாமல் non-linear முறையில் சொல்லப்பட்டதால் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சுவாரசியமான சம்பவங்களை அமைப்பது கடினமாகியது, அறவே இல்லை! இயக்குனர் பாலாஜி சக்திவேல் எடுத்துக் கொண்ட கதையை linear முறையில் சொல்லியிருந்தால் பார்வையாளர்களிடம் அதிகமான பாதிப்பு இருந்திருக்கும். எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தது. எனக்கு முன்னால் பார்த்த நண்பன் ”படம் சரியில்லை” என்று சொல்லியிருந்தான். நான் படம் ஆரம்பித்து கால் மணி நேரம் கழிந்தபின் பார்த்திருக்கின்றேன் (பின்பு தான் படம் ஃப்ளாஷ்பேக்
என்று தெரிந்தது). அவன் முதலில் இருந்து பார்த்திருக்கின்றான்.

இதற்கு நேர்மாறாக “ஆனந்த தாண்டவம்” (சுஜாதாவின் ”பிரிவோம் சந்திப்போம்”)
இயக்குனர் காந்தி கிருஷ்ணா linear முறையில் இல்லாமல் non-linear முறையில்
சொல்லியிருந்தால் படத்தில் ஆச்சரியமான திரைக்கதை திருப்பங்களை ஏற்படுத்தி சுவாரசியமாக்கி இருக்க முடியும். அதிலும் இது மிகவும் பிரபலமான கதை என்பதால் presentation-ல் தான் வித்தியாசம் காட்டி கதையில்
பார்வையாளர்களின் சுவாரசியம் கூட்டியிருக்க முடியும். நான் படித்த
முதல் (தொடர்)கதை என்பதால் திரைப்படம் மிகுந்த ஏமாற்றமளித்தது.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் சொல்லும் கதைகள் அருமை, திரைக்கதையில்
(presentation) தான் பிரச்னை. கே.வி.ஆனந்த்திற்கு சுபா போல இவருக்கு
(பல தமிழ் பட இயக்குனர்களுக்கும்) ஒரு திரைக்கதை ஆள் அவசியம் தேவை.
“ஆய்த எழுத்து” படம் போல் non-linear முறையில் கதை சொல்ல
முனைந்திருக்கின்றார், என்றாலும் பாத்திரப் படைப்பு, சம்பவங்கள் எல்லாம்
முதல் பாதியில் இன்னும் சிறப்பாகச் செய்திருந்தால் “காதல்” போல் மிகப்
பெரும் வெற்றி பெற்றிருக்கும். திரைக்கதை அமைக்கும் போது இப்போதைய
மல்டிபிளக்ஸ் கலாசாரத்தையும் மனதில் கொண்டு திரைக்கதை
அமைத்திருக்க வேண்டும். (”எத்தனை தடவை தான் சர்ஃப் வாங்குவே?” என்று
ஆடியன்ஸ் கமெண்ட் கேட்கின்றது) முதல் அரைமணி நேரம் படம் பார்த்து
மல்டிபிளக்ஸ் ஆடியன்ஸ் (elite audience, who will spend more for a movie)
எழுந்து போகும் அபாயமிருக்கின்றது. இரண்டு கதைகளையும் முதலில்
இருந்தே parallel ஆக கொண்டு போகும் உத்தியை இயக்குனர் தவிர்த்தது
படத்தின் பலவீனம். முதல் பாதி முழுவதும் இரண்டாம் பாதி படத்தின்
set up போல் ஆகிவிட்டது. இந்தப் படத்தை உருவாக்கத் தூண்டுதலாக
இருந்த செய்தியையும் கடைசியில் பேப்பர் செய்தியாகவே காட்டியிருக்கின்றார்
இயக்குனர். ”இந்தக் கதையை இதைவிட சிறப்பாக வேறு யாராலும் சொல்ல
முடியாது” என்று பார்ப்பவர்களை நினைக்க வைக்கும் திரைப்படங்கள் தான்
மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. உதாரணம் - ஷங்கர் தன் படத்தில்
இருக்கும் லாஜிக் ஓட்டைகளை படம் பார்க்கும் போது நம்மை யோசிக்கவே
விடமாட்டார் மிகவும் கச்சிதமான திரைக்கதை!

இசை - பாடல்கள் குறித்துப் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. காதல்
படங்களில் soul-searching music அவசியம், இதில் அது மிஸ்ஸிங். சிக்கனம்
பார்த்து திரைக்கதையில் சமரசம் செய்து கொண்டிருக்கின்றார். It seems budgetary
constraints have tied screenwriter's hands while writing screenplay.

சில இடங்களில் நடுங்கும் காமிரா கவனத்தைக் கலைக்கின்றது. முதலில்
போலீஸ் விசாரணையை ஜன்னல் கம்பிகளுக்கு வெளியிலிருந்து
(3rd person's POV) காட்டுவது ஏன்? யார் ஆசிட் ஊற்றியது என்பதை
சஸ்பென்சாக வைக்கும் எண்ணத்தில் தான் இயக்குனர் ஜோதி - ஸ்ரீ
கதையுடன் முதல் பாதியிலேயே மனீஷா யாதவ்வின் கதையைச்
சொல்லவில்லையோ? அப்படி காட்டியிருந்தால் நமக்கு முதல் பாதியில்
ஏற்படும் அலுப்பு வந்திருக்காது. பொழுதுபோக்கு அம்சங்கள் தானாக
கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும்.

திங்கட்கிழமை மாலைக் காட்சியில் கூட்டமில்லாத படத்தின் பாக்ஸ்
ஆபீஸ் நிலைமை என்ன? முதல் பாதியில் கொஞ்சம் கூடுதல் கவனம்
செலுத்தியிருந்தால் படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும். இந்தக் கதையும்,
இயக்குனர் பாலாஜி சக்திவேலும் இன்னும் பெரிய வெற்றிக்குத்
தகுதியானவர்கள் என்பதால் இதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் தான்.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் அடுத்த படத்தை repeat audience-ஐ கருத்தில்
கொண்டு இளமையாக, இனிமையாக, கலர்ஃபுல்லாக எடுக்க வாழ்த்துக்கள்!

கடைசியாக, “நீதானே என் பொன்வசந்தம்” டிரைய்லர் பார்த்தபோது அது VTV
அளவுக்கு இருக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...