Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out

Pages

Friday, March 2, 2012

இன்று...

த்தனை வித்தியாசமான ஒரு மனிதரை நான் இதுவரை பார்த்திருப்பேனா என்ற கேள்விக்கு பதிலை என்னால் ஊகிக்கமுடியவில்லை. திபெத்தியர் என்று சொல்லலாம் போலிருந்தார். ஆனால் உறுதியாகச் சொல்லமுடியாது.


ஐந்தடிக்கும் குறைவான உயரம், இடுங்கிய கண்கள், தோலில் சுருக்கங்கள், ஏறக்குறைய உடம்பு முழுதும் மூடியிருந்தது - தீ விபத்தில் சிக்கிக்கொண்டு, தப்பிப் பிழைத்தவரோ... குரலில் பிசிறடித்த ஒரு ரீங்காரம் - சற்று கூர்ந்து கேட்டால் தான் புரியும். இத்தனைக்கும் மிகக்குறைவாகத் தான் பேசினார்(!). குரலிலிருந்து வயதைக் கணிக்க முடியவில்லை. உடலிலிருந்து ஒருவிதமான ரசாயன நெடி - ஏதாவது ஃபாக்டரியில் வேலை செய்பவராயிருக்கலாம்.

என்னைப் பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. நீங்கள் தினமும் கண்ணாடியில் பார்க்கும் போது தெரியும் உங்களைப் போன்ற சராசரி தான் நான். தற்சமயம் சராசரிக்கும் கீழான நிலையில் இருக்கிறேன். நான் செய்து கொண்டிருந்த வேலைக்கும் தற்போது செய்து கொண்டிருக்கும் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் அனைத்துப் பிரச்னைகளையும் எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையுடன் சென்று கொண்டிருக்கின்றேன். முதலில் யாருக்காக இந்தப் பிரச்னைகளை எதிர்கொண்டு, சமாளித்து, சம்பாதிக்க வேண்டும்? எதற்காக? பணம் என் பிரச்னைகளைத் தீர்த்துவிட்டதா? தீர்க்கத்தான் முடியுமா? தண்ணீரில் கலந்து என் கண்ணீரில் மட்டும் வாழும் காதல் மனைவி அஷ்வதி, அருமை மகள் நிவேதிதா... என் சிந்தனைகளையும் மீறி அவர் என் கவனத்தை ஈர்த்தார்.

பீச் ஒண்ணு கொடுங்க...’’

என்னங்க கண்டக்டர் நான் நூறு ரூபாய் கொடுத்தேன்’’

பொறுங்க... நான் என்ன ஓடியா போயிட்டேன்?’’

சில்லறை தான் வெச்சிருக்கீங்கல்ல...

அப்ப நீயே சில்லறை எடுத்துட்டு வந்திருக்கணும்...’’ - கண்டக்டர் கூட்டத்தில் நகர்ந்தார்.
இனிமேலும் வாக்குவாதம் செய்தால் மரியாதை போய்விடும் என்று அந்தப் பெரியவர் அமைதியானார்.

சே... என்ன சார் இது? பஸ்லேயிருந்து ராக்கெட் வரைக்கும் எல்லாத்திலேயும் ஊழல் அதனால தான் சார் இப்படி’’ அவர் மனதைப் படித்தவர் போல அருகில் இருந்தவர் ஆரம்பித்தார். பஸ்சில் பக்கத்தில் நின்றவர்கள் திரும்பிப் பார்க்க திபெத்தியர் மட்டும் எந்த சலனமும் இல்லாமல் இருந்தார்.

பொறந்ததுலயிருந்து சாகறவரைக்கும் எல்லாத்துக்கும் லஞ்சம்...

“.................”

நீங்க எந்த ஊரு? எங்க போறீங்க?” - நான் பெரியவரிடம் கேட்டேன்.

என் கேள்விக்கு வாயைப் பொத்திக் கொண்டு சைகை செய்தார்.

வடமாநிலமா? எந்த ஸ்டாப்?”

“.........ம்ம்ங்ங்....” - அடுத்த ஸ்டாப் என்று சைகை செய்தார்.

பாத்தீங்களா நாமல்லாம் ஊரு விட்டு ஊரு வந்து கஷ்டப்பட வேண்டியிருக்கு... ஆனா...” - அருகில் நின்றிருந்தவர் எதற்கு வம்புஎன்பது போல் சற்று தள்ளி நின்றார்.

“................”

இந்தக் காலத்துல எவனையும் நம்பமுடியறதில்ல. பாருங்க வெளிநாடு கூட்டிட்டுப் போறதா சொல்லி பணத்தை வாங்கிட்டு ஏமாத்தியிருக்காங்க.

“......ம்ம்ம்....

நம்ம நாட்டுல பத்துல மூணு பேர் ஒருவேளை தான் சாப்பிடறான்...

‘‘தப்பே உறைக்காத அளவுக்கு அதுவே உண்மையா விஸ்வரூபம் எடுத்துருக்கு...’’

என்ன சார் கம்யூனிஸ்டா நீங்க?” - முன்சீட்டிலிருந்தவர். அவர் குரலில் கிண்டல் இருப்பது போல் பட்டது.

சகமனுசனுக்காக கவலைப்பட்டா அதுக்கும் ஒரு சாயம் பூசி அந்த உணர்வைக் கேலி செய்யாதீங்க சார்...

கம்யூனிஸ்டுகளே ரொம்ப மாறிட்டு வர்றாங்க சார்...” - அருகில் நின்றிருந்தவர்.

இந்த அவசரயுகத்துல பெத்து வளத்தவங்களையே கவனிக்கமுடியாம தானே முதியோர் இல்லத்துல கொண்டு போய் சேர்க்கறாங்க” - முன்னால் சீட்டிலிருந்தவர்.

அதாவது பரவாயில்லே... வீட்டைவிட்டே துரத்திவிடறாங்களே.

மனிதாபிமானமே இல்லாம போச்சு சார். பாருங்க பீகார்ல சின்னப்பையனை பத்து ரூபாய் லஞ்சம் கொடுக்காததால ஓடற ரயில்யிருந்து தூக்கிவீசியிருக்காங்க அதுவும் ரயில்வே போலீஸ்..!பக்கத்தில் ஐ-பாட்இளைஞன் எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தான்.

பிக்பாக்கெட் அடிச்சா தான் சார் போலீஸ் பிடிப்பாங்க... கோடி கோடியா ஊழல் பண்ணா அதே போலீஸ் பாதுகாப்பு கொடுப்பாங்க...” - சிரித்தார் முன்சீட்டுக்காரர். என் கேள்வி இப்படி ஒரு செயின் ரியாக்ஷனைஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

சுற்றியிருப்போரெல்லாம் பேசியும் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த அந்தப் பெரியவர் மட்டும் பேச்சில் கலந்து கொள்ளவேயில்லை. ஆனால் உன்னிப்பாகக் கேட்கிறார் என்று மட்டும் புரிந்தது.

லஞ்சம், ஊழல் மூலமாத் தான் பணம் சம்பாதிக்க முடியும்னு ஆகிப் போச்சு...

‘‘என்ன சார் செய்யறது விலைவாசி எல்லாருக்கும் ஒண்ணு தான் சார்...’’

நீங்க எங்க சார் வேலை பாக்கறீங்க?” - முன்சீட்.

வெளிநாட்டுலே இருந்தேன்... இப்போ இங்கயே சொந்தமா தொழில் செய்யறேன்...” - என் பதிலால் பாதிக்கப்படாது இருந்தார் பக்கத்துச் சீட் பெரியவர்.

அங்கேயே இருந்திருக்கலாமே?”

பிரச்னை வராத வரைக்கும் எல்லா ஊரும் நல்ல ஊர் தான் சார்...

ரொம்ப சரியாச் சொன்னீங்க

எந்த நாடுன்னாலும் சரி அதிகாரமும், பணமும் இருக்கறவன் தான் பிழைக்க முடியுது...

எல்லாத்திலேயும் பொய் எங்கயும் பொய்...சே...அதிலும் எல்லா பொய்யும் உண்மையை விட அதிக நம்பகத்தன்மையோடத் தான் வருது...

‘‘உலகம் முழுக்க மனுசங்ககிட்ட சுயநலம் அதிகமாயிருச்சு. ஆனா கலாசாரமும், பண்பாடும் இருக்கிற நம்ம நாட்டுல இப்படி மனிதநேயம் இல்லாம போறது ரொம்பக் கொடுமை சார்...’’

‘‘வசதியா வாழணுங்கற வெறி கண்ணை மறைச்சுடுச்சு...’’

‘‘என்ன சார் பண்றது. இருக்கற விலைவாசியெல்லாம் பார்த்தா கொள்ளையடிச்சா தான் வாழவே முடியும் போல. லஞ்சம் வாங்காதவங்களுக்கு எதுனாச்சும் கன்சஷன் இருக்கா என்ன? மிடில் கிளாஸ் ஜனங்க இப்ப சிட்டிக்குள்ளே வீடு வாங்க முடியுமா சொல்லுங்க பாக்கலாம்? வேற வழியில்லை சார்.’’

‘‘இப்படி பாருங்க சார்... சுயநலம் இல்லாதவன் வாழ்க்கையில முன்னேற முடியுமா?’’

‘‘சுயநலமாயிருக்கறது தப்பில்ல சார். ஆனா அது அடுத்தவங்களை பாதிக்காத மாதிரி இருக்கணும்...’’

‘‘எல்லாரும் சுயநலமாயிருந்துட்டா பிரச்னையில்ல சார்... அதிகமா ஆசை கூடாதுன்னு சொன்னாங்க ஆனா இப்போ ஆசைப்படலேன்னா வாழ்க்கையில எதுவும் சாதிக்க முடியாதுன்னு ஆகிடுச்சு. என்ன சார் சரியா?’’

‘‘சார் நீங்க எங்க வேலை பாக்கறீங்க?’’

‘‘சரி சார் பாக்கலாம்...’’ - சாமார்த்தியமாக பதிலைத் தவிர்த்துச் சென்றார்.

அவர் ஸ்டாப்பிங்கில் தலையசைத்து விடைபெற்றார்.

நான் பீச்சில் இறங்கினேன். அந்தத் திபெத்தியரும் இறங்கினார். என்ன இது நம்மை விட மாட்டார் போலிருக்கிறதேஎன்று நினைத்தேன்.

‘‘கவலைப்படாதீர்கள் இன்னும் சிறிது தூரம் தான்...’’

‘‘எங்கே போவதற்கு?’’

‘‘நீங்கள் எங்கே போகணும் என்று வந்தீர்களோ அங்கே தான்..’’

‘‘!?!?!’’

‘‘வாங்க உட்கார்ந்து பேசலாம்’’

அவர் காட்டிய இடத்தில் ஆளரவமே இல்லை.

தூரத்தில் இளைஞர்கள் கூச்சல் போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். படகு மறைவில் வழக்கமான காதலர்கள்.

‘‘நீங்க யார் சார்? ஏன் என் பின்னால வர்றீங்க?’’

‘‘வாருங்கள்... வந்து முதலில் அமருங்கள்...’’ தன் பக்கத்து இருக்கையிலிருந்த மணலைத் தட்டி சுத்தப்படுத்தினார். அவரின் சுத்த தமிழ்ப் பேச்சு சற்று அந்நியமாயிருந்தது. உச்சரிப்பும் இலங்கைத் தமிழ் போல வித்தியாசமாயிருந்தது.

‘‘இல்ல சார் பரவாயில்ல சொல்லுங்க...’’

‘‘உங்களுக்கு உதவத் தான் நான் வந்திருக்கின்றேன். மிகவும் சலிப்புற்றிருக்கின்றீர்கள் போலிருக்கின்றது... இப்போது அமரலாம் தானே?’’

‘‘என்ன சார் புதுசா ஏதாவது பிசினஸா? வேண்டாங்க நிறைய பார்த்தாச்சு... நிறைய இழந்தாச்சு... வேலை, பணம், குடும்பம் எல்லாமே...’’

‘‘உட்காருங்கள் வெங்கட்ராமன் ராமச்சந்திரன்’’

‘‘என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்?’’ எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘‘நீங்கள் எப்பேர்பட்ட அறிவாளி இப்படி மனம் கலக்கமடையலாமா?’’

‘‘நீங்க யார்ன்னு இன்னும் சொல்லவேயில்லயே’’ - ‘ஹோய்என்று விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் கூச்சல் திரும்பிப் பார்க்கவைத்தது.

‘‘அனைத்துமே வணிகமயமாகிப் போய்விட்டதால் தங்களைப் போன்ற இயற்கையை நேசிக்கும் மனம் படைத்தவர்கள் வியாபார சுழற்சிச் சக்கரத்தில் சிக்கி நசுங்க நேரிடுவது வருத்தமளிக்கும் ஒன்று தான்.’’

‘‘நீங்களும் என்னைப் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலரா?’’ - அவரைப் பற்றி நான் கொண்டிருந்த மனப்பிம்பம் சற்றே வெளிறிப் போய், வார்த்தைகளில் தானாகவே மரியாதை கூடியது.

‘‘தங்களின் சமீபத்திய ஆய்வறிக்கையை அரசுகள் நிராகரித்துவிட்டது மிகவும் வருத்தமளிக்கின்றது... என்ன செய்வது எத்தனை முறை எத்தனை மொழிகளில் சொல்லியும் இவர்கள் செவிமடுத்துக் கேட்பதேயில்லை.’’

‘‘ஒரு உண்மையைச் சொன்னதற்காக என் வேலை பறிபோனது...’’

‘‘என்ன செய்வது உங்களின் உண்மை உலகை மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கை வசதிகளையும் புரட்டிப் போட்டுவிடும் என்பதால் உங்களின் வேலையைப் பறித்திருக்கின்றார்கள்.’’

‘‘தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?’’

‘‘அறிவியல் அனுமதிக்கும் அளவு கடவுள் நம்பிக்கை உண்டு.’’

‘‘அதாவது ஏறக்குறைய இல்லை... அப்படித்தானே? மற்றவர்கள் இருப்பதைத் தான் கண்டுபிடித்தார்கள். நீங்கள் - உங்களை சேர்ந்தவர்கள் - தான் இல்லாததையே கண்டுபிடித்தீர்கள். எதுவுமே இல்லாத சூனியத்திலிருந்து தான் எல்லாமே ஆரம்பித்தது. அந்த பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தது நீங்கள் தானே? படைப்பைக் கண்டுணர்ந்தது நீங்கள் தான்.’’

நான் பதில் கூறாது மழுப்பலாகச் சிரித்தேன். இன்னும் கொஞ்சநேரம் கழித்து நானே கடவுள்என்று சொல்லி காற்றிலிருந்து ஏதாவது வரவழைக்கப் போகிறாரோ என்று அச்சப்பட்டேன். நல்லவேளை அப்படி ஏதும் செய்யவில்லை. இருக்கின்ற பிரச்னையில் இதுவேறு.

‘‘தங்களைப் போன்ற மனிதர்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றார்கள். என்னுடன் வருவதற்குத் தங்களுக்கு விருப்பமுண்டா?’’

‘‘எங்கே? நீங்க யார்ன்னு தெரியாம எப்படி வரமுடியும்?’’

‘‘நம்பமுடியாத மனிதர்களை நிறைய சந்தித்திருப்பீர்கள் போலிருக்கின்றது’’

‘‘நீங்கள் கேலி செய்தாலும் நிஜம் அதுதான்...’’

‘‘நான் பலமுறை இங்கே வந்திருக்கின்றேன். உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. என்ன செய்வது வளர்ச்சி மனிதனை பின்னோக்கி அல்லவா கொண்டு சென்றுவிட்டது. ஐந்து முறை தவறுகளை அழித்துத் திருத்தியும் இதைத் தவிர்க்க முடியவில்லை. இது ஆறாவது முறை... ஒவ்வொரு முறையும் தவிர்க்க முடியாத முடிவை எடுக்கும் கட்டாயம்...’’

‘‘என் கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் தரவில்லை’’

‘‘அது உங்கள் பதிலைப் பொறுத்து அல்லவா இருக்கின்றது.’’

‘‘என் பதிலுக்கு அவசியமில்லை. போகும் வழியில் நீங்களே தெரிந்துகொள்வீர்கள்’’

‘‘இருந்தாலும்...’’ - ஏதாவது தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவராயிருப்பாரோ அல்லது ஏதாவது மதப்பிரசங்கமோ?

‘‘வார்த்தை ஜாலங்களை நம்பி மிகவும் ஏமாற்றமடைந்திருக்கின்றீர்கள் போலிருக்கின்றது...’’

‘‘உங்கள் கையைக் கொடுங்கள்...’’

என் பதிலுக்குக் காத்திராமல் அவராகவே என் கையை எடுத்து அவருடையதுடன் பிணைத்துக் கொண்டார்.

‘‘என்னை நம்புகின்றீர்கள் அல்லவா?’’

‘‘ஆம்’’

‘‘வாருங்கள் போகலாம்.’’

நான் கண்விழித்தபோது வெளிச்சம் கண்ணைக் கூசியது. உடலை சிறிதும் அசைக்க முடியவில்லை. முடிவற்ற ஒரு வெளிச்சக்கற்றைக்குள் அதிவேகமாகப் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். என்னுடன் மற்றும் பலர் என்னைப் போலவே அரைப்படுக்கை நிலையில்.

சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தவர் எனக்கு மிகவும் பரிச்சயமானவர் என்று தோன்றியது. ஆனால் அது போன்ற ஒரு உருவத்தை நான் இதுவரை பார்த்ததேயில்லை என்பதும் ஆச்சரியமாயிருந்தது. விவரிப்புக்கு அப்பாற்பட்ட உருவம் அவருடையது. என்னைப் பார்த்து சிரித்தது போல் தோன்றியது - ஆனால் அந்த உருவத்தில் (?) எப்படி சிரிக்க முடியும்?

சற்றே பார்வையைத் திருப்பிப் பக்கத்தில் இருந்தவரின் கைகடிகாரத்தைப் பார்த்தேன்.
அது 12.00-ல் நின்று போயிருந்தது.

இன்று... டிசம்பர் 21, 2012.

[[[

(குறிப்பு: பூமியிலுள்ள உயிரினங்கள் 444, 375, 251, 200, மற்றும் 65 மில்லியன் ஆண்டுகள் என ஐந்து முறை பேரழிவிற்கு உட்பட்டிருக்கின்றன)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...